செங்குன்றம் பேரூர் 17வது வார்டு திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்

செங்குன்றம் பேரூர் 17வது வார்டு திமுக சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் பேரூர் 17.வது வார்டு திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 70.வது பிறந்தநாளை முன்னிட்டு பிரசாந்த் மருத்துவமனை, டாக்டர் என்எம்டி. கோபால் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு
ஒன்றிய பிரதிநிதியுமான பேரூராட்சி கவுன்சிலருமான என்எம்டி. இளங்கோவன் தலைமை வகித்தார். வார்டு செயலாளர் ஆர்கேஎஸ். சுரேஷ் வரவேற்றார். ஸ்ரீதர், வேன் சங்கர், டி.கோபால், எம்எஸ்ஆர். பாஸ்கர், எஸ்.ராஜா, எஸ்.அன்பு செல்வன், ஆர்கேஎஸ். சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். முகாமில் 10க்கு மேற்பட்ட மருத்துவர்கள் 20.க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சர்க்கரை, கொழுப்பு, ஈசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக செய்து பின்னர் மாத்திரை மருந்துகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேரூர் செயலாளர் ராஜேந்திரன், புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ஜெய்மதன், பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணைத்தலைவர்.விப்ரநாராயணன், பேரூர் அவைத்தலைவர் அருள்தேவநேசன், துணைச் செயலாளர்கள் சீனிவாசன், கபிலன், முனீஸ்வரி சுகுமார், பொருளாளர் சந்திரசேகர், மாவட்ட பிரதிநிதி சுரேந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu