பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு செங்குன்றம் டாக்டர் அம்பேத்கர் குழு நண்பர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வழக்கறிஞர் மதன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி வட்டாச்சியர் செல்வகுமார், செங்குன்றம் சரக சட்டஒழுங்கு காவல் ஆய்வாளர் ஜெகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு டாக்டர் அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் துப்புரவு பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கி சமபந்தி விருந்தினை தொடங்கி வைத்தனர்.

இதில் கவுன்சிலர்கள் 4-வது வார்டு கார்த்திக்கோட்டீஸ்வரன், 10-வது வார்டு கோமதிபாஸ்கர், பேரூர் கழக துணை செயலாளர் கபிலன், 8-வது வார்டு கவுன்சிலர் வினோதினிபாலாஜி, 10- வது வார்டு செயலாளர் மதிவாணன், பேரூர் கழக மாணவரணி அமைப்பாளர் மோகன்குமார், பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சாம்கார்த்திக், 6-வது வார்டு துணை செயலாளர் கருப்பசாமி, சமூக சேவகர் நாகூர்அனீபா மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!