செங்குன்றம் அருகே 25டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 6 பேர் கைது

செங்குன்றம் அருகே 25டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 6 பேர் கைது
X

ரேஷன் அரிசி பதுக்கியதாக கைது செய்யப்பட்ட 4 பேர்.

செங்குன்றம் அருகே 25 டன் ரேஷன் அரிசி, 5 டன் ரேஷன் கோதுமை கடத்தியதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் சுற்றுப்பகுதிகளில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது விளங்காடுபாக்கம் பகுதியில் கிடங்கு ஒன்றில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் கோதுமை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 25டன் ரேஷன் அரிசி மற்றும் 5டன் ரேஷன் கோதுமையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிடங்கில் பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் சூர்யா, நஜார் சந்திரமாலிக், பிரபுல்நஹாக், மதஹாப்நஹாக், கென்ச்தாஸ், பிண்டுதாஸ் ஆகிய 6பேரை கைது செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!