செங்குன்றம் அருகே தனியார் சிமெண்ட் கலவை கம்பெனிக்கு சீல் வைப்பு

செங்குன்றம் அருகே தனியார் சிமெண்ட் கலவை கம்பெனிக்கு, ஊராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
செங்குன்றம் அருகே தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த தனியார் கம்பெனிக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி சோத்துப்பாக்கம் சாலையில் ரெடிமிக்ஸ் ஜல்லி சிமெண்ட் கலவை தயாரிக்கும் கம்பெனி இயங்கி வந்தது. இந்த கம்பெனி பொது மக்களுக்கு பாதிப்பையும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருந்ததாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.
ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. புகார் மனுவை ஏற்றுக் கொண்டு கிராம சபை கூட்டத்தில் கம்பெனியை மூடவேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்னர் கம்பெனியை காலி செய்ய ஆறு மாதகாலம் அவகாசம் கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் நலன் கருதாமல் மீண்டும் கம்பெனி தொடங்கப்பட்டதால் பொதுமக்கள் அளித்த புகாரை ஏற்று பொன்னேரி பொறுப்பு வட்டாட்சியர் கந்தசாமி, வருவாய் ஆய்வாளர் கீதா, புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் சாந்திபாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம் ஆகியோர் முன்னிலையில் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாடேவிட்சன் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த கம்பெனியை இயங்க விடாமல் இருக்கவேண்டி அறிவிப்பு கடிதத்தை ஒட்டி சீல் வைத்தனர்.
இதில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகா, துணைத் தலைவர் அருண்குமார், வார்டு உறுப்பினர்கள் சாந்திமூர்த்தி, வேளாங்கண்ணி சரவணன், நாகஜோதிவாசுதேவன், தரணிதரன், விமலநாதன், தாஸ், கீதாவேல்முருகன், வளர்மதிஈஸ்வரன், ஊராட்சி செயலர் தேவகி, மக்கள் நல பணியாளர் சதீஷ், கிராம நிர்வாக உதவியாளர்கள் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் உடனிருந்தனர். சிமெண்ட் கலவை கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu