வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்: வட்டாரபோக்குவரத்து அலுவலர்கள்

வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்: வட்டாரபோக்குவரத்து அலுவலர்கள்
X

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீவீர வாகன சோதனை கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் 

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீவீர வாகன சோதனையில் ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீவீர வாகன சோதனை கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்து ரூ. 3.6 லட்சம் அபராதம் விதித்தனர்.

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நல்லூர் சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் கனரக வாகனங்களான பேருந்துகள், லாரிகள், ஆம்னி பேருந்துகள், வேன்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஹாரன்கள் குறித்து ஆய்வு நடத்தினர்.

தடை செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்களில் இருந்து ஏர் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் 108 வாகனங்களை ஆய்வு செய்ததில் 36வாகனங்களில் விதிகளை மீறி பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 3.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மீண்டும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பொறுத்தக்கூடாது எனவும், அதிகாரிகளின் தணிக்கையில் ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்களில் மீண்டும் ஏர் ஹாரன் பொருந்தியது கண்டறியப்பட்டால் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் எச்சரித்தார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!