செங்குன்றம் அருகே வீடுகளில் மழை நீர் சூழ்ந்த மக்களுக்கு நிவாரணம்

செங்குன்றம் அருகே வீடுகளில் மழை நீர் சூழ்ந்த மக்களுக்கு நிவாரணம்
X

படம்.

செங்குன்றம் அருகே விளாங்காடு பக்கம் ஊராட்சி மல்லி மாநகர் பகுதியில் மழை நீர் சூழ்ந்து அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத அவதிப்பட்டு வந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வீடு தேடி வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களிலும் கனமழை காரணமாக வீடுகளில் மழை நீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மழையால் பாதிக்கப்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியம், விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மல்லிமா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழை வெள்ளத்தால் வீடு சுற்றி மழை நீர் சூழ்ந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பிரட், குடிநீர்பாட்டில், பிஸ்கட், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பொருட்களை சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.கே. இனியன் தலைமை தாங்கி வழங்கினார்.

இதில் அன்பின் அப்போஸ்ராஜ், தீனதயாளன், ஜான்சன், வெங்கட்ரமணன், குமார் உள்ளிட்ட மல்லிமா நகர் இளைஞரணியினர் உடனிருந்தனர்.

Tags

Next Story