ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா
X

ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்

செங்குன்றம் அருகே ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழாவில் விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்து அம்மனை தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பாடியநல்லூர் ராஜாங்கம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ யோகலிங்கேஸ்வரர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பந்தகால் நடுதல், கங்கை திரட்டுதல், காப்புகட்டுதல், அக்னி கப்பறை எடுத்தல், அலகுபானை எடுத்தல், பதிஅலங்கார வர்ணனை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், அம்மன் கரகம் எடுத்தல், கூழ்வார்த்தல் போன்ற பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் புனித நீராடி சந்தனம் பூக்களால் அலங்காரம் செய்து பின்னர் பக்தர்கள் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீகுண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் இறங்கி தீ மிதித்து தங்களின் நேர்த்தி கடனை பூர்த்தி செய்தனர்.

இத்திருவிழாவிற்கு ஆலய பொறுப்பாளர்கள், சுற்றுவட்டார பக்தர்கள் உள்ளிட்ட கிராமபொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஆலயம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. முடிவில் அம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் மேளதாள வானவேடிக்கைவுடன் திருவீதி உலா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா கணேசன், ஆலய தலைவர் மதியழகன் , செயலாளர் ஹரிதாஸ், பொருளாளர் மூர்த்தி , துணைத்தலைவர்கள் மோகன், பன்னீர்செல்வம் , ஜனகு, இணை செயலாளர்கள் ராஜி, முருகன், துணை செயலாளர்கள் பாஸ்கரன், குழந்தைவேலு மற்றும் கிராம பொதுமக்கள் வெகு விமர்சையாக செய்திருந்தனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!