சோழவரம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.150 கோடி அரசு நிலம் மீட்பு
ஜேசிபி மூலம் இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்கள்.
மாதவரம் அருகே தனியார் சோப் நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த ₹150 கோடி மதிப்பிலான 14.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. கிராம நத்தம் நிலம் போலி பட்டா மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அகற்றப்பட்டது மீண்டும் ஆக்கிரமித்ததால் வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் அடுத்த ஒரக்காடு கிராமத்தில் 14.5 ஏக்கர் கிராம நத்தம் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. தனியார் சோப்பு நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. 20ஆண்டுகளுக்கும் மேலாக போலி பட்டா மூலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலம் கடந்த 2022 ஆம் ஆண்டு மீட்க்கப்பட்டு வருவாய்த்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தது.
இது தொடர்பாக தனியார் சோப் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து ஆக்கிரமிப்பில் கட்டிடங்கள் கட்டி அனுபவித்து வந்தது. இது தொடர்பாக கிராம மக்கள் வருவாய்த்துறையிடம் மீண்டும் புகார் அளித்த நிலையில் இன்று மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் தலைமையில் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் தனியார் சோப்பு நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. தனியார் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் வருவாய்த்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu