ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுக்கொண்ட மாணவிகள்.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றம் ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் 12ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் மகாலட்சுமி 2022 - 2023 ஆம் ஆண்டு அறிக்கையை வாசித்தார். கல்லூரி நிர்வாகி நீதியரசர் வெங்கட்ராமன் மாணவிகளைப் பாராட்டி உரையாற்றி மாணவிகளுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார்.
2018 - 2021 ஆம் ஆண்டு இளநிலை, முதுநிலை முடித்த சென்னைப் பல்கலைக்கழகம் தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவிகளின் பெயர் பட்டியலை கல்லூரி துணை முதல்வர் கீதா வாசித்தார். சென்னை பல்கலைக்கழகம் தர வரிசைப் பட்டியலில் பி.காம் (சி.எஸ்.) ஜனனி முதல் இடமும், பிஎஸ்சி (சிஎஸ்) 6வது இடமும், எம்.எஸ்.சி. (சி.எஸ்) கஜலட்சுமி 6வது இடமும், பிபிஎம் எஸ்.தாரா 9வது இடமும் பெற்ற மாணவிகளுக்கு தங்க நாணயங்களும், 302 மாணவிகளுக்குப் பட்டங்களையும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பட்டம் பெற்ற அனைத்து மாணவிகளும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவ்விழாவில் அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தொடர்ந்து பிற்பகல் முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்வு கல்லூரி முதல்வர் மகாலட்சுமி, துணை முதல்வர் கீதா ஆகியோர் முன்னிலையில் முன்னாள் மாணவிகள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu