செங்குன்றம் அருகே மழைகால நோய்கள் தடுப்பு மருத்துவ முகாம்
படம்
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டமன்ற தொகுதி புழல் ஒன்றியம் புள்ளிலையன் ஊராட்சி லோட்டஸ் பள்ளியில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்விரமேஷ் தலைமை தாங்கி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.பின்னர் முகாமில் செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுனிதா புள்ளிலையன் ஊராட்சி வாழ் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இரும்பல் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளை செய்து மழைக்கால நோய்கள் தடுப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளை கூறினர்.
இதணைத்தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் அகிலன், கிராம செவிலியர்கள் ஹேமலதா, ஹேமமாலனி, மூத்த செவிலியர் மீனா, ஆன் செவிலியர் அருண்பிரசாத், ஆய்வக அலுவலர் விநாயகம் ஆகியோர் பரிசோதனை செய்து கொண்ட பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கினர். இதில் சமூக சேவகர் ரமேஷ், துணைத்தலைவர் மாதவன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu