மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ சுதர்சனம் வழங்கினார்.
Rain Relief Material
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 5000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிசரவணன் ஏற்பாட்டில் புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் .சரவணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு தற்போது வீசிய மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் உள்ள சுமார் 5000 குடும்பங்களுக்கு குடிநீர், 5 கிலோ அரிசி, பாய், போர்வை போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் ஊராட்சியில் பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.இதில் கிளை செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் பரிமளசெல்வம், அருண், பாரதி, காமராஜ், நாகராஜ், கோவிந்தராஜ், சதீஷ், டில்லி, தங்கராஜ், மல்லிராஜா, ராமு, திருநாவுகரசு, அப்போஸ், கபிலன், எழிலன், அருள்மொழிவர்மன், அசோக், அருள், அண்ணாதுரை, இளவரசன், ராஜேஷ், அஜித்குமார், நாகா, நடராஜன்,ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் நிலவழகிஇனியன், ரதிசீனிவாசன், அருணாதேவிசீனு, சத்தியசீலன், ஆனந்திநாகராஜன், இளைஞரணி தனுஷ், சரவணன், செல்வகுமார், பிரேம்குமார், விமல், சதீஷ்குமார், விக்னேஸ்வரன், சிவக்குமார், தயாநிதி, சரவணன், நீலமேகம், பார்த்தசாரதி, மகேந்திரன் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu