புழல் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் சாமி தரிசனம்

புழல் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் சாமி தரிசனம்
X

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கு ஏற்று சுவாமி தரிசனம் செய்த போது.

புழல் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் காவாங்கரை ஜிஎன்டி சாலை புழல் செக்போஸ்ட் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா ஆலய நிர்வாகிகள் டி.மணிகண்டன், சி.மணிகண்டன், நீலகண்டன் ஆகியோர் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக கோ பூஜை, தன பூஜை, நவக்கிரக ஹோமம், கால பூஜை, லட்சுமி கணபதி ஹோமம் போன்ற யாகத்துடன் தொடங்கிய கும்பாபிஷேகமானது மங்கள வாத்தியங்களுடன் யாகத்தில் இருந்து புனிதநீர் கலசம் புறப்பட்டு ஆலயத்தின் மூலவரான ஸ்ரீசெல்வ விநாயகர், மூலவர் மூர்த்தி உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று ஆலய கலசத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புனித நீரானது அங்கு கூடியிருந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. யாகசாலையில் பூஜை செய்த கலசங்கள் ஆலய நிர்வாகிகளால் பக்த கோடிகளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து அறுசுவை அன்னதானம் பிரசாதங்கள் ஆலய நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இவ்விழாவில் புழல், காவாங்கரை, செங்குன்றம் சுற்றுவட்டார பக்த கோடிகள், ஆலய நிர்வாகிகள், பகுதி வாழ் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil