புழல் சிறைக் கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
பைல் படம்
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அன்னனூர் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (66). இவர் திருமுல்லைவாயல் பகுதியில் நடந்த கொலை வழக்கில் போலீசாரால் கைதுசெய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்ததால் கடந்த வாரம் சிறை மருத்துவர்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .
அங்கு அவருக்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்.நேற்று இரவு மீனாட்சி சுந்தரம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புழல் சிறை வளாகத்தில் விசாரணைக்கைதிகள், தண்டனைக் கைதிகள், பெண்கள் சிறை என மூன்றுக்கும் தனித்தனி அதிகாரிகள், தனித்தனி நிர்வாகம் என செயல்படுகிறது. ஒவ்வொரு பிளாக்குக்கும் 3 முதல் 4 காவலர்கள்வரை பாரா பார்ப்பார்கள். 24 மணிநேரமும் இது நடக்கும். பொதுவாக மற்ற பிளாக்குகளுக்கு வார்டனும் ஹெட் வார்டனும் பொறுப்பாக இருப்பர். ஆனால் உயர் பாதுகாப்பு பகுதிக்கு ஹெட் வார்டனுக்கு மேல் அசிஸ்டென்ட் ஜெயிலர், டெபுடி ஜெயிலர் இருப்பார்கள். இவர்களுக்கு மேல் ஜெயிலர் இருப்பார். இத்தனை பாதுகாப்பையும் பார்த்து விட்டுத்தான் அசம்பாவிதங்களும் இங்கே சாதாரணமாக நடக்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu