புள்ளிலையன் ஊராட்சியில் புதிய குளம் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

குளம் அமைக்கும் பணியை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
New Pond- செங்குன்றத்தை அடுத்த புழல் ஒன்றியத்தில் உள்ள புள்ளிலையன் ஊராட்சியில் இந்தியத் திரு நாட்டின் 75 வது சுதந்திர ஆண்டினைக் கொண்டாடும் வகையில் ஒன்றிய அரசின் அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் தமிழக முதல்வரின் ஆணைப்படி மாநிலத்தில் நீர் ஆதாரங்களைப் பெருக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவுப்படி புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்வி ரமேஷ் தலைமையில் புள்ளிலையன் ஊராட்சி பாயசம்பாக்கம் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் புதிய குளம் உருவாக்க திட்டமிடப்பட்டு பூமி பூஜைகள் செய்து பணிகள் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது.
அவற்றை திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். இதில் புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்விரமேஷ், புழல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதநாயகம், மம்மு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வான்மதி, ஒன்றிய உதவி பொறியாளர் ராணி, பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன் சமூக சேவகர் ரமேஷ் ,ஊராட்சி செயலர் பொன்னையன் ஆகியோர் உடனிருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu