/* */

லோக்சபா தேர்தல் :புழல் ஒன்றிய திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

Pulal Union Dmk Agents Meet புழல் ஒன்றிய திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பங்கேற்றார். மற்ற நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

லோக்சபா தேர்தல் :புழல் ஒன்றிய திமுக   பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
X

விளாங்காடுபாக்கம் ஊராட்சி புழல் ஒன்றிய திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

Pulal Union Dmk Agents Meet

இந்தியாவில் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.இதற்கான ஆயத்த ஏற்பாடுகளை தமிழகத்திலுள்ள அனைத்து பிரதான கட்சிகளும் துவங்கிவிட்டது. அந்த வகையில் திமுகவும் அதனுடைய நிர்வாகிகளுக்கு தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடத்தி பணிகளை விரைவு படுத்திட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும் எனவும் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டமன்ற தொகுதி புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட விளாங்காடுபாக்கம் ஊராட்சி சமுதாய நலகூடத்தில் சென்னை வடகிழக்கு மாவட்டம் புழல் ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிசரவணன் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான சுதர்சனம், மாதவரம் தொகுதி பார்வையாளர் டாக்டர் சந்திரபாபு ஆகியோர் கலந்துகொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு எவ்வாறு செயல்படுவது, வாக்காளர் பட்டியல்களை சரிபார்ப்பது மற்றும் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறும் பாக முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

எனவே சென்னை வடகிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பாக முகவர்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில் அவைத்தலைவர் செல்வமணி, துணைசேர்மன் சாந்திபாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்செல்விரமேஷ், ஜானகிராமன், துணைத்தலைவர் கலாவதிநந்தகுமார் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

Updated On: 31 Oct 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    உ.பி.யில் பா.ஜ.விற்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம் மோடியா? யோகியா?
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மரக்கன்று நடும்பணி..!
  3. அரசியல்
    அயோத்தி ராமர் வழங்கிய ஆசியால் உ.பி.யில் தப்பி பிழைத்த பாரதிய ஜனதா
  4. அரசியல்
    மிரட்டிய கர்நாடகம், மிரட்ட போகும் ஆந்திரா: என்ன செய்ய போகிறார்...
  5. தொழில்நுட்பம்
    காதுகேளாத குழந்தை இருக்குதா..? கவலைப்படாதீங்க..! விரைவில் நல்லசேதி...
  6. அரசியல்
    என்டிஏ கூட்டணி தலைவராக மோடி தேர்வு: 3வது முறையாக பிரதமராவது
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வில் நடப்பட்ட...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக சுற்றுச்சூழல் தின விழாவில் விளையாட்டு வீரர்களுக்கு பழ
  9. அரசியல்
    இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த மம்தா
  10. காஞ்சிபுரம்
    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு பரப்பிய காஞ்சி...