குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
புழல் அருகே ஆமை வேகத்தில் நடைபெறும் குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டி பணிகள்
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் 31.ஆவது வார்டு புழல் அடுத்த பேரறிஞர் அண்ணா நகர், எம்ஜிஆர் நகர்,ராகவேந்திரா நகர் உள்ளிட்ட 5.க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் 20.ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போதிய குடிநீர் ஆதாரம் இல்லாத காரணத்தினால் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மாதவரம் சைக்கிள் ஷாப் பகுதியில் குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி ஒன்று அமைக்க திட்டமிட்டு அப்பணிகளுக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு ஒப்பந்ததாரர் அலட்சிய போக்கினால் இப்பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது .
மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் மேற்கொண்ட பகுதிகளில் சுமார் 20,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும், தாங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையின் காரணத்தினால் குடிப்பதற்கு அதிக விலை கொடுத்து தண்ணீர் கேன்கள் வாங்குவதாகவும், மேலும் வீட்டின் உபயோகத்திற்கும் பணம் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளதாகவும் கூறினர்,
இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் மனு கொடுத்ததின் காரணத்தினால் தாங்கள் பகுதியில் குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி கட்ட நிதி ஒதுக்கி மேல்நிலை 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தேக்க தொட்டி கட்ட பணிகள் தொடங்கப்பட்டது.
15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்பணிகள் ஆமை வேகத்தில் தற்போது வரை நடைபெறுவதாகவும் மேலும் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதிகாரிகள் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் எனவும் கூறினர்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களின் நலனை கருதி இப்பணிகளை முழு வீச்சில் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu