சோழவரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கல்

சோழவரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கல்
X

மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் வழங்கினார்.

சோழவரம் அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் சோழவரம் ஊராட்சியில் இயங்கிவரும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மகேஷ்வரி,லீலாவதி தலைமையில் நடைபெற்றது.

சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான மீ.வே.கருணாகரன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு சுமார் 233 மாணவ -மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.

அப்போது தமிழகத்தில்்தற்போது பொற்கால ஆட்சிி நடைபெற்று வருவதாகவும், ஒன்றல்ல இரண்டல்ல தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலைை உணவு திட்டம், கல்லூரிி மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1000, கிராமங்களில்் இருந்து பேருந்து வசதிகள் இல்லாத மாணவர்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் தாய் உள்ளத்தோடு ஏழை மாணவர்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் எண்ணத்தோடு திட்டங்களை தீட்டி வரும் நம் தமிழ்நாட்டின் அரசை மற்ற மாநிலங்களும் திரும்பி பார்க்கும் அளவிற்கு நம் முதல்வரின் திட்டங்கள் இருக்கின்றது என்றும் இவ்வாறு பேசினார்.

இதில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஆசிரிய ஆசிரியைகள், மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்