புழல் சிறையில் 21 சிறைக்கைதிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்

புழல் சிறையில் 21 சிறைக்கைதிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்
X
திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 21 கைதிகள் தேர்வு எழுதினர்.

தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையான பிளஸ் டு பொதுத்தேர்வு இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கியது. இதில் புழல் மத்திய சிறையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு சிறைக்கைதிகள் எழுதும் வகையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது .

இந்த தேர்வில், பெண் கைதிகள் 4,பேரும் ஆண் கைதிகள் 17 பேரும் தேர்வை எழுதினார்கள். சிறைக்கைதிகள் தேர்வு எழுதும் மையத்தை சிறைத்துறை டிஐஜி முருகேசன் பார்வையிட்டார். உடன் டிஐஜி கனகராஜ் சிறைக் கண்காணிப்பாளர் நிகிலா ராஜேந்திரன் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!