புழல் சிறையில் உடல் நலக்குறைவால் கைதி உயிரிழப்பு

புழல் சிறையில் உடல் நலக்குறைவால் கைதி உயிரிழப்பு
X

படம்

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புழல் சிறை பெண் கைதி உயிரிழந்தார்.

புழல் மகளிர் தனி சிறையில் 100க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோடம்பாக்கத்தை சேர்ந்த பாத்திமா கிறிஸ்டி ( வயது 72) என்பவர் வயது மூப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த பெண் கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story