ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் பொருட்களை போலீசார் பறிமுதல்: 3 பேர் கைது

ஆந்திராவுக்கு கடத்த இருந்த  ரேஷன் பொருட்களை போலீசார் பறிமுதல்:  3 பேர் கைது
X

ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் கோதுமை மற்றும் அரிசி மூடைகள்

செங்குன்றம் எல்லையம்மன் பேட்டை பகுதியிலிருந்து , சுமார் 30 டன் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்குக் கடத்த முயன்றது தெரியவந்ததத

ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் கோதுமை மற்றும் அரிசி உள்ளிட்டவை போலீசார் பறிமுதல் இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்ட சோழவரம் போலீஸார், தங்களுக்குக் ரேஷன் பொருட்கள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்த தகவலின் பேரில் செங்குன்றம், நல்லூர் சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, சுங்கச்சாவடி பகுதிக்கு வந்த ஆந்திரமாநில பதிவு எண் கொண்டலாரியில் அந்த லாரியை போலீசார் சோதனை நடத்தியதில், செங்குன்றம் அருகே உள்ள எல்லையம்மன் பேட்டை பகுதியிலிருந்து , சுமார் 30 டன் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்குக் கடத்த முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து, லாரியின் டிரைவர் மீஞ்சூர் அடுத்த வீச்சூரை சேர்ந்த செந்தமிழ்(37) என்பவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், எல்லையம்மன்பேட்டையில் உள்ள தனியார் சேமிப்புக் கிடங்கில் போலீஸார் சோதனை செய்தனர்.

அப்போது, 7.5 டன் கோதுமை பதுக்கி அங்கு 12.5 டன்ரேஷன் அரிசி, பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, லாரியில் கடத்த முயன்ற, சேமிப்புக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 42.5 டன் ரேஷன் அரிசி மற்றும் 7.5 டன் கோதுமையை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, லாரி ஓட்டுநர் செந்தமிழ், சேமிப்புக் கிடங்கு ஊழியர்களான, பொன்னேரி, மேட்டுக்காலனியை சேர்ந்த சுகுமார்(24), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன்(25) ஆகிய 3 பேரைபோலீஸார் கைது செய்து. பறிமுதல் செய்யப்பட்ட ,கோதுமை.அரிசி மற்றும் கைது செய்யப்பட்ட 3 பேரைச் சோழவரம் போலீஸார், திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.


Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!