சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி சீரழித்து தற்கொலைக்கு காரணமான போலீஸ் கைது

சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி சீரழித்து தற்கொலைக்கு காரணமான போலீஸ் கைது
X
போலீஸ் மகேஷ் தன் வாழ்க்கையை சீரழித்தது பற்றி போனில் வீடியோ பதிவு செய்து, அதையே வாக்குமூலமாக கொள்ளுமாறு கூறி இருந்தார்

சிறுமியின் தற்கொலைக்கு காரணமான போலீஸ் ஒருவர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் ,மாதவரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் மகேஷ் (27). இவர், கடந்த 2020-ம் ஆண்டு சமூக வலைதளம் மூலம் சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்தார்.நாளடைவில், சிறுமிக்கு திருமணம் செய்து கொள்வதாக ஆசை ஆசை வார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கி கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார்.

அதன்பின்னர், அந்த சிறுமியுடனான தொடர்பைத் துண்டித்துவிட்டாராம். இதனால் மனவேதனை அடைந்த சிறுமி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன், போலீஸ் மகேஷ்,தன் வாழ்க்கையை சீரழித்தது பற்றி ஸ்மார்ட் போனில் வீடியோ பதிவு செய்து, அதையே தன் வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளுமாறு கூறி இருந்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், எம்.கே.பி. நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தவறு செய்தவர் ஒரு போலீஸ்காரர் என்பதால் போலீசார் முறையாக விசாரிக்காமல், தற்கொலை என வழக்குப் பதிந்துள்ளனர். இதனால் சிறுமியின் பெற்றோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில், சிறுமி வாக்குமூலத்தில் கூறிய அனைத்து விவரங்களும் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து, மகேஷை பிடித்து விசாரித்தனர். அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, போக்சோ மற்றும் பாலியல் பலாத்காரம், கடத்தல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீஸ்ர் மகேஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!