ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடியை போலீஸ் என்கவுன்டர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடியை போலீஸ்  என்கவுன்டர்
X

போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம்.

சென்னை மாதவரம் அருகே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

சென்னை மாதவரம் அருகே பிரபல ரவுடி போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுமார் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர்.

இந்த விசாரணையில் அவர் பல்வேறு உண்மைகளை காவல்துறையிடம் தெரிவித்ததின் பெயரில் அதன் புலன் விசாரணைக்காக தடயங்களை சேகரிப்பதற்காக அவரை மாதவரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர்

இந்த நிலையில் அவர் போலீஸ்காவிலிருந்து தப்பிவிடும் முயன்றதாக தெரிகிறது.இதனையடுத்து போலீசார் அவரை சரணடையுமாறு பலமுறை எச்சரிக்கை செய்தனர்.

ஆனால் அவர் சரணடைய மறுத்து வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசாரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து போலீசார் தற்காப்புக்காக அவரை மூன்று ரவுண்டுகள் சுட்டனர். இதனால் சம்பவ இடத்திலேயே ரவுடி திருவேங்கடம் உயிரிழந்துள்ளார்,

அதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அவரது உடலானது பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இந்த என்கவுண்டர் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடம் என்பவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் மற்றொரு முக்கிய குற்றவாளி அருள் என்பவரின் உயிர் நண்பர் ஆவார்.

இந்த கொலைக்கான திட்டங்கள் தீட்டியது மற்றும் கொலை திட்டம் வகுத்து வேவு பார்த்தது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்ததும் அருள் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாலை நேரத்தில் பிரபல ரவுடியை போலீசார் என்கவுன்டர் செய்த சம்பவம் தற்போது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்