சென்னை மாதவரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம்

சென்னை மாதவரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம்
X
சென்னை மாதவரம் கிழக்கு பகுதி பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

மாதவரத்தில் உள்ள சூரியா திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாதவரம் கிழக்கு பகுதி பாமக சார்பில் செயற்குழு மற்றும் பொதுகுழு கூட்டம் மாதவரம் கிழக்கு பகுதி செயலாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

பகுதி தலைவர் தீனா அனைவரையும் வரவேற்றார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அம்பத்தூர் நகரமன்ற தலைவர் கே.என்.சேகர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரகாசம், முன்னாள் மாவட்ட செயலாளர் ஞானபிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக்கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி பூத்கமிட்டி நிர்வாகிகள் அமைத்து தேர்தல் களபணிகளை செய்வது, புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், அனைத்து கிளைகளில் கொடிகளை ஏற்றுதல், தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதிக்கீடு வழங்கிட வலியுறுத்தியும், சாதிவாரி கணக்கு எடுப்பு எடுத்திட வலியுறுத்தியும் மற்றும் பல்வேறு பணிகள் மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட தலைவர் சபாபதி, மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட அமைப்பு தலைவர் பூபாலன், மாவட்ட பொருலாளர் கிருஷ்ணவேணி, மாவட்டத் துணைச் செயலாளர் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபதி, பசுமைதாயகம் நிர்வாகிகள் பத்மநாபன், லோகேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சரவணரூபன் இளைஞரணி நிர்வாகி பாபு மற்றும் விக்னேஸ்வரன், மகளிரணி நிர்வாகிகள் தமிழ்செல்வி, திலகவதி உட்பட ஜெகன்குமார், தாழைபாபு, ராம்குமார், பெருமாள், முரளி, ராய்ஜோசப், புருஷோத்தமன், ஆண்டனிராஜ், ரகு, நந்தகோபால், விஜயகுமார், சோமு, கிரி, குமார் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

முடிவில் வட்ட செயலாளர் ரமேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!