Pmk General Assembly Meet செங்குன்றம் அருகே பாமக பொதுக்குழு கூட்டம்:நிர்வாகிகள் பங்கேற்பு
செங்குன்றம் அருகே மணலி பாமக சார்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
Pmk General Assembly Meet
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மணலி பகுதி பாமக பொதுகுழு கூட்டம்.மணலி பகுதி செயலாளர் .சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
மணலி பகுதி அமைப்பு செயலாளர் முத்து அனைவரையும் வரவேற்றார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சரவணரூபன், மாவட்ட மாணவர் சங்க துணை செயலாளர் மாரிமுத்து மாவட்ட மாணவர் சங்க துணை தலைவர் தாமோதரன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் இரா.சிவபிரகாசம், மாவட்ட தலைவர் பி.எஸ்.சபாபதி ஆகியோர் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி பூத்கமிட்டி நிர்வாகிகள் அமைத்து தேர்தல் களபணிகளை செய்வது, புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், அனைத்து கிளைகளில் கொடிகளை ஏற்றுதல், தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதிக்கீடு வழங்கிட வலியுறுத்திடவும், சாதிவாரி கணக்கு எடுப்பு எடுத்திட வலியுறுத்தியும் மற்றும் பல்வேறு கட்சி பணிகள் மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட அமைப்பு தலைவர் பூபாலன், மாநில செயற்குழு உறுப்பினர் லிங்கமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜேஸ், மாவட்ட துணை தலைவர் லட்சுமிநாராயணன், மாவட்ட துணை செயலாளர் பாலாஜி, புழல் ஒன்றிய செயலாளர் துளசிங்கம், வில்லிவாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சகாதேவன், திருவொற்றியூர் கிழக்கு பகுதி தலைவர் கிருஷ்ணன், திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் சின்னதுரை மற்றும் மணலி பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், முன்னாள் பொறுப்பாளர்கள், கட்சி முன்னோடிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் 20-வது வட்ட செயலாளர் வினோத்குமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu