பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு
X

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரணை செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதான கருக்கா வினோத்தை காவலில் எடுத்து 7 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ .ஏ அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கடந்த 25 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கிண்டி போலீசார் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மேலும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விசாரணை அதிகாரிகளையும் நியமித்துள்ளனர்.

இந்த நிலையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத்தை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதையடுத்து இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் உத்தரவிட்ட பின்பு புழல் சிறையில் இருக்கக்கூடிய ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கருக்கா வினோத்தின் பின்னணில் உள்ளவர்கள் யார் என்பது போன்ற அதிர்ச்சி தகவல்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!