பசுபொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா!
செங்குன்றம் அருகே மொண்டியம்மன் நகர் பஜாரில் பசுபொன் முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம், செங்குன்றம் அருகே பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொண்டியம்மன் நகர் பஜாரில் ரெட்ஹிட்ஸ், பாடியநல்லூர் கிளை மறவர் நலச்சங்கம் சார்பில் பசுபொன் முத்துராமலிங்கம் தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு ரெட்ஹிட்ஸ், பாடியநல்லூர் கிளை மறவர் நலச் சங்க தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.
செயலாளர் இந்திரகுமார், பொருலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பசுபொன் முத்துராமலிங்கம் தேவரின் திருஉருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் இனிப்பு மற்றும் பழங்களை படையலிட்டு குத்து விளக்கு ஏற்றிவைத்து மலர்கள் தூவி தீபாராதனை காண்பித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செங்குன்றம் கூட்டுச்சாலையில் உள்ள நேதாஜி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தேவர் பேரவை இடத்தில் கொடியை ஏற்றி வைத்தனர்.
இவ்விழாவை முன்னிட்டு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானத்தை வழங்கினர். இதில் நிர்வாகிகள் செந்தில்பாண்டியன், கணேஷ்குமார், ரமேஷ், வெள்ளசாமி, பார்த்திபன், செந்துரபாண்டி, முத்துவேல், கிருஷ்ணன், காளிதாஸ், பாலு, ராமநாதன், முத்துராமலிங்கம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu