நல்லூர் ஊராட்சியில் புறக்காவல் நிலையம் திறப்பு

நல்லூர் ஊராட்சியில் புறக்காவல் நிலையம்  திறப்பு
X

சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் பகுதியில் புறக்காவல் நிலையத்தை,  ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடந்தது.

செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடந்தது. நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தவல்லி டில்லி தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்துகொண்டு, புறக்காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதில் சோழவரம் ஒன்றிய கவுன்சிலர் ரேவதி துரைவேல், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வி பாலகிருஷ்ணன், செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் மணிவண்ணன், செங்குன்றம் காவல் மாவட்ட உதவி ஆணையர் முருகேசன், சோழவரம் காவல் ஆய்வாளர் ஜெகநாதன், உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் உட்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story
ai marketing future