செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் உதவி மையம் துவக்க விழா: ஆவடி காவல் ஆணையர் பங்கேற்பு

செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் உதவி மையம் துவக்க விழா: ஆவடி காவல் ஆணையர் பங்கேற்பு
X
செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் உதவி மையத்தை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்.
செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் உதவி மையத்தை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவல் உதவி மையம் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஆவடி போக்குவரத்து காவல் துணை ஆணையர் அசோக்குமார் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்துகொண்டு போக்குவரத்து காவல் உதவி மையத்தை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இதைத்தொடர்ந்து பேசிய ஆவடி காவல் ஆணையர், செங்குன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து காவல் உதவி மையம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் விபத்துகள் ஏற்படாமலும், போக்குவரத்து நெரிசல் இல்லாமலும் தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.

செங்குன்றம் போக்குவரத்து உட்கோட்டம் காவல் உதவி ஆணையர் மலைச்சாமி, செங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையம் ஆய்வாளர் ராஜேஷ் உட்பட செங்குன்றம் சுற்றுவட்டார சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.


Tags

Next Story