அன்னை தெரசா பிறந்தநாள் விழாவில் நல உதவிகள்..!
நலஉதவிகள் வழங்கப்பட்டது.
அன்னை தெரசாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னை தெரசா அன்பு சேவை அறக்கட்டளை சார்பில் செங்குன்றம், வடகரை, அழிஞ்சிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சிற்றுண்டி, போர்வை, மருத்துவமனை செவிலியர்கள், மின்வாரியம், தபால் ஊழியர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு தொப்பி, மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஹோட்டல் நடத்த நான்கு சக்கர தள்ளுவண்டி உள்ளிட்ட நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் இரா.திராவிடடில்லி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் வழக்கறிஞர் செல்வக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் ஆர்.ராஜாராபர்ட், செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், கிராண்ட்லைன் ஊராட்சி மன்ற முன்னான் தலைவர் ஜெகதீசன், வடகரை ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் ஜானகிராமன், ஸ்ரீவெங்கடேஸ்வரா ஞானம் கார்மெண்ட்ஸ் யுவராஜ், வடகரை அரசு ஆண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கந்தசாமி, மின்வாரியம் நாதன், பாபு சைக்கிள் ஒர்க்ஸ் கல்விநாதன் ஆகியோர் கலந்துகொண்டு நல உதவிகளை வழங்கி துவக்கி வைத்தனர்.
முன்னதாக அன்னை தெரேசா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இதில் நவீன்குமார், பிரேம்குமார் உதயசூரியன், தினேஷ் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu