/* */

தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புதிய தார்சாலை பணி துவக்கம்

திருவள்ளூர் மாவட்டம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புதிய தார்சாலை பணி துவக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புதிய தார்சாலை பணி துவக்கம்
X

திருவள்ளூர் மாவட்டம் தீர்த்தகிரியம்பட்டு ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

மாதவரம் அருகே தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புதிய தார்சாலை பணி துவக்க விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமங்களில் தார் சாலை அமைக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி ஆதிதிராவிடர் நல மேம்பாட்டு அடிப்படை வசதிகள் செய்வதற்கு முதல் தவணையாக ரூ.1,68,80,000 (ஒருகோடி அறுபத்தெட்டு லட்சத்து என்பதாயிரம்) தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி வாழ்மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை தேவையான குடிநீர்வசதி, சாலைவசதி, தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து முதல்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி 2-வது வார்டு அம்பேத்கர் தெருவிற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் புழல் வட்டார வளர்ச்சி அலுவலர் மம்மு, புழல் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கமணி திருமால், துணை பெருந்தலைவர் சாந்திபாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாடேவிட்சன் தலைமை தாங்கி புதிய தார்சாலை பணிக்கான சிறப்பு பூமி பூஜைகள் செய்து பின்னர் புதிய தார்சாலை பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அருண்குமார், வார்டு உறுப்பினர்கள் சாந்திமூர்த்தி, வேளாங்கண்ணி சரவணன், நாகஜோதிவாசுதேவன், தரணிதரன், விமலநாதன்,குசேலதாஸ், கீதாவேல்முருகன், வளர்மதி ஈஸ்வரன் மற்றும் ஊராட்சி செயலர் தேவகி, மக்கள் நலபணியாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Updated On: 9 Feb 2023 6:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்