New Concrete Road Work செங்குன்றம் அருகே புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி துவக்கம்

New Concrete Road Work   செங்குன்றம் அருகே புதிய சிமெண்ட்   சாலைகள் அமைக்கும் பணி துவக்கம்
X

புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணியினை ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி டில்லி துவக்கி வைத்தார்.

New Concrete Road Work நல்லூர் ஊராட்சியில் புதிய சிமெண்ட் சாலைகளுக்கான பணியினை ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி டில்லி தொடங்கி வைத்தார்.

New Concrete Road Work

செங்குன்றம் அருகே நல்லூர் ஊராட்சி இரண்டு தெருவிற்கு புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணியினை ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி டில்லி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கினங்க சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் ஆலோசனைபடி திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லூர் ஊராட்சி மருதபாண்டிநகர் அன்னை தெரேசா தெருவிற்கும் மற்றும் பாலகணேசன்நகர் 1-வது குருக்கு தெருவிற்கு புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி டில்லி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சோழவரம் ஒன்றிய குழு கவுன்சிலர் ரேவதிதுரைவேல் பொது நிதியிலிருந்து சுமார் ரு.10 லட்சம் மதிப்பீட்டில் நல்லூர் ஊராட்சி மருதபாண்டிநகர் அன்னை தெரேசா தெருவிற்கும் மற்றும் பாலகணேசன்நகர் 1-வது குருக்கு தெருவிற்கு புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்கும் ‌பணிகளை சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும் சோழவரம் ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான மீ.வே.கருணாகரன் கலந்துகொண்டு பூமி பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பணியை துவக்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்விபாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர் பாஸ்கர் , ஊராட்சி செயலர் லோகநாதன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பெரியசாமி , சங்கர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி