செங்குன்றம் தீயணைப்பு-மீட்புபணிகள் துறை சார்பில், நீத்தார் நினைவு நாள் அஞ்சலி
செங்குன்றம் தீயணைப்பு-மீட்புபணிகள் துறை சார்பில், தீவிபத்து தடுப்பு குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
மாதவரம் தொகுதி செங்குன்றம் தீயணைப்பு-மீட்புபணிகள் துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று பணியின்போது உயிர்நீத்த பணியாளர்களை நினைவுகூறும் விதமாக தேசிய அளவில் நீத்தார் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தி 14.04.2023 முதல் 20.04.2023 வரை ஒருவாரகாலம் தீத்தொண்டுநாள் வாரமாக கடைபிடிக்கப்பட்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செங்குன்றம் தீயணைப்பு-மீட்புபணிகள் துறை சார்பில், தீவிபத்து தடுப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
அதன்படி இவ்வருடம் முதல்நாளான தமிழ்நாடு தீயணைப்பு-மீட்புபணிகள் துறை இயக்குநர் அபேஷ்குமார் ஆணைப்படி, வடமண்டல
இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் , சென்னை புறநகர்மாவட்ட அலுவலர் தென்னரசு ஆகியோர் உத்தரவின்படி செங்குன்றம் தீயணைப்பு-மீட்புபணிநிலையத்தில் வீரமரணமடைந்த பணியாளர்களுக்கு மவுனஅஞ்சலி செலுத்தி நினைவு ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்தொடர்ச்சியாக செங்குன்றம் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் செங்குன்றம் நிலைய பணியாளர்கள் சோழவரம் மற்றும் செங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடிசைபகுதி, பேருந்து நிலையம், திரையரங்குகள்,பள்ளிகள், தொழிற்சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிபத்து தடுப்பு குறித்து செயல்முறை விளக்கம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கி ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu