/* */

அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தேசிய விருது: ஜனாதிபதி வழங்கல்

அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தேசிய விருதை ஜனாதிபதி வழங்கினார்.

HIGHLIGHTS

அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தேசிய விருது: ஜனாதிபதி வழங்கல்
X

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் யோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஆஷா கல்வி நாதன். இவர் நடந்து முடிந்து பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று கிராமத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சாலை மற்றும் அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து வந்தார். மக்கள் எந்த நேரத்திலும் சென்றாலும் அவரை சந்தித்து கிராம மக்களின் குறைகளை கூறினால் அதற்கு ஏற்ற நடவடிக்கை எடுத்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய குழு தமிழகத்தில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் உள்ளிட்ட பிரச்சனை குறித்து பொது மக்களுடைய கலந்துரையாடி அவர்கள் குடிநீர் பிரச்சினை சரியாக செய்து வருகின்றனர் என்று ஆய்வு செய்து சென்றனர்.

இதில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டமிடல் இயக்கத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தி கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் சார்ந்த சிறந்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் சிறந்த பெண்மணிக்கான தேசிய விருதை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.ஆஷா கல்விநாதனுக்கு வழங்கி பாராட்டினார்.

Updated On: 4 March 2023 7:15 AM GMT

Related News