அன்னை தெரசா பிறந்த நாளை முன்னிட்டு நல உதவிகள்

அன்னை தெரசா பிறந்த நாளை முன்னிட்டு நல உதவிகள்
X

அன்னை தெரசா பிறந்தநாள் விழாவில் முதியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சோழவரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னை தெரசா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நல உதவிகள் அன்னதானம் வழங்கப்பட்டது.

சோழவரம் ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் ஊராட்சியில் இயங்கிவரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆத்மாலம், அன்னை சாரதா ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னை தெரசாவின் 114-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அன்னை தெரசா சேவை அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆத்மாலயம், அன்னை சாரதா ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சமபந்தி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி அறக்கட்டளை நிறுவனர் அருள்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக

பொன்னேரி வட்டாட்சியர் பா.மதிவாணன் கலந்துகொண்டு அன்னை தெரசா திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் காலை சிற்றுண்டி, நலத்திட்ட உதவிகள் மற்றும் மதியம் சமபந்தி அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

இதில் அறக்கட்டளை துணைத்தலைவர் ராஜேஷ், மின்வாரியம் நாதன், அண்ணல் அம்பேத்கர் இலவச இரவு பாடசாலை நிறுவனர் முருகானந்தம், சரவண சங்கர், கார்த்திகேயன், திவாகர், கர்ணா, ஸ்ரீ சாரதா ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி விசாலாட்சி மலர்விழி, யோகமதி, நந்தகுமார், மோரை டேனியா, மகளிர் சுய உதவிக் குழுவினர் தேன்மொழிசேகர், சாந்திபாபு, மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு குழு சங்கத் தலைவர் அருண், ஜிலாலி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது