நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட்; செங்குன்றத்தில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட்;  செங்குன்றத்தில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
X

செங்குன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

செங்குன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

செங்குன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டமன்ற தொகுதி செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றம் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நகர செயலாளர் ஜோதி தலைமையில் நடைபெற்றது.

மாதவரம் தொகுதி அமைப்பாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் புயல்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் நீலமேகம் கலந்துகொண்டு டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த பாஜக அரசை கண்டித்து கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் மகளிரணி ராசாத்தி ஜோதிபாஸ், நகர பொருலாளர் முனுசாமி மற்றும் நகர துணை செயலாளர்கள் குப்பன்கார்த்திக், சுப்பிரமணி, குப்பன், வினோதினி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி