மாதவரம் அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்:எம்எல்ஏ பங்கேற்று துவக்கம்
சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம்எம்எல்ஏவுமான எஸ்.சுதர்சனம் பொதுமக்கள் மனு வழங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
Makkaludan Muthalvar Special Camp
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் புள்ளிலையன் ஊராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் என்னும் இல்லம் தேடி அரசு சேவை முகாம் புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வி ரமேஷ் தலைமையில் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சரவணன்,மாவட்ட பிரதிநிதி ரமேஷ்,புழல் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கமணி திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக புழல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிசேகரன், சித்ரா பெர்னாண்டோ ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றிவைத்து நிகழ்ச்சினை துவக்கி வைத்தார்.பின்னர் இம்முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் எரிசக்திதுறை, வருவாய் மற்றும் மருத்துவதுறை, பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கூட்டுறவுத்துறை,ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் வாழ்வாதார கடன் உதவிகள் உள்ளிட்ட 21 துறைகள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான கோரிக்கை மனுக்களை பெற்று கணினியில் பதிவு செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது.
இதில் ஊரக வளர்ச்சித் துறை உதவி திட்ட இயக்குனர் ரூபேஷ் குமார், செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் பாலகிருஷ்ணன், சரக உதவியாளர் ராஜா ராபர்ட், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சாய் கணேஷ், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆஷா கல்விநாதன், புள்ளிலைன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாதவன், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி மாணிக்கம், ராஜ்குமார், ஊராட்சி செயலர்கள் பொன்னையன், டில்லி, தேவகி, உல்லாசம், மகேந்திரன், யுகேஸ்குமார் உள்ளிட்ட அனைத்து துறை நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu