ஸ்ரீதேவி வேம்புலி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உள்ள சுவாமிகள்.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் பொத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி வேம்புலி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் பி.எஸ்.சபாபதி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சகாதேவன், முன்னாள் பொத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரி, பன்னீர்செல்வம், அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, கோபூஜை, தனபூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, ரக்ஷாபந்தனம் மற்றும் யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கலசங்களை மேளதாளத்துடன் ஆலய மாடவீதிஉலாவந்து வேதமந்திரங்கள் முழங்க விமானம் மற்றும் மூலவர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதணைத்தொடர்ந்து புனிதநீர் பக்தர்கள் மீது தெளித்தனர்.விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளர் கோ.இரவிராஜ், முன்னாள் அம்பத்தூர் நகரமன்ற தலைவர் கே.என்.சேகர், கிராம பெரியவர்கள் ஆறுமுகம், சம்பந்தம், வெங்கடேசன், ரமேஷ், ஏகாம்பரம், வினோத்குமார், கவுன்சிலர் ராஜேஷ்வரிமுனுசாமி உள்ளிட்ட சுற்றுவட்டார பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்றவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் மற்றும் நீர்மோர் உள்ளிட்ட குளிர் பானங்களும் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu