மாதவரம் காவல் துறை, குடியிருப்பு நலச்சங்கத்தினரின் சைக்கிள் பேரணி
மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார்கள் குடியிருப்பு நலச்சங்கத்தினர் மூலம் இணைந்து சைக்கிளில் பேரணியாக வீதிவீதியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு கற்பகம் நகரில் உள்ள சுக சுகாதார பொது நலச்சங்கத்தினர், மாதவரம் காவல் ஆய்வாளர் காளிராஜ் மற்றும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் திருநாவுக்கரசு ஆகியோர் அப்பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குறிப்பாக பெண்கள் செயின்பறிப்பு குற்றவாளிகளிடமிருந்து தங்களை எப்படி பாதுகாத்துகொள்வது சிறுவர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபடவும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் செல்போனில் பப்ஜி போன்ற விளையாட்டுகளில் ஈடுபடவேண்டாம் எனவும் பொதுவாக பல அறிவுரைகளை கூறி தணிகாசலம் நகர், வாழைத்தோப்பு , பிரகாஷ் நகர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதிவண்டிகளில் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் காவல் நிலைய ஆய்வாளருடன் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் குடியிருப்பு நலச்சங்கத்தினர் ஏற்பாட்டில் மானவ மாணவிகளின் திறமையை வளர்த்துக் கொள்ளவும் தற்காப்பு கலைகளை கற்க வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்தனர். பரதம் ,, சிலம்பம் கராத்தே, கவிதை, கட்டுரை, சிறுகதைகளை அப்பகுதி மானவ மாணவிகள் செய்து காண்பித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இறுதியில் அனைவருக்கும் நினைவுபரிசுகள் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu