மாதவரம் அருகே காலபைரவர் எழுந்தருள் விழா

பொத்தூர் கிராமத்தில் காலபைரவர் எழுந்தருள் விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Madavaram KalaBairavar Temple
பொத்தூர் கிராமத்தில் காலபைரவர் சுவாமி எழுந்தருள் விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் பொத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அன்னபூரணி அம்மன் சமேத ஓதனவனேசுவர் ஆலயத்தில் காலபைரவர் சுவாமி எழுந்தருள் விழா ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் கயிலை ஒளியம் ஒளியரசு ஐயாவின் திருக்கரங்களால் வேள்ளி பூஜை, புனிதநீர் கலச பூஜை போன்ற பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் மேளதாளத்துடன் புனிதநீர் கலசத்தை ஆலய மாடவீதி உலா வந்து எழுந்தருளும் காலபைரவர் சுவாமிக்கு புனிதநீர் அபிஷேகம் செய்து, பின்னர் பால், தயிர்,சந்தனம்,இளநீர், மஞ்சள்,குங்குமம், ஜவ்வாது,தேன்,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்து வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இவ்விழாவிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் .சபாபதி மற்றும் ஆலய பொறுப்பாளர்கள், கிராம பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு காலபைரவர் சுவாமி அருளை பெற்றுசென்றனர்.முடிவில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாமக மாவட்ட தலைவர் சபாபதியின் திருக்கரங்களால் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானத்தை வழங்கினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் பூசாரி வாசுஐயா, சுரேஷ், அருண் உள்ளிட்ட சிவனடியார்கள் கூட்டம் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu