பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க பகுதி மக்கள் கோரிக்கை

பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க பகுதி மக்கள் கோரிக்கை
X

பண்டிகாவனூர் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள   மின்கம்பம்

பண்டிகாவனூர் பகுதியில் ஆபத்தான மின்கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் அகற்ற வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

பண்டிகாவனூர் பகுதியில் ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், பண்டி காவனூர் கிராமம் பெருமாள் கோவில் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இந்தப் பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த நிலையில் குடியிருப்பு நடுவில் உள்ள சுமார் 10. ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் மின்கம்பம் ஒன்று கீழ்ப்பகுதியில் சிமெண்ட் கான்கிரீட் பூசுதல் உதிர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி எலும்பு கூண்டு போல் காட்சி அளிக்கிறது .

தற்போது மழை காலம் என்பதால் சற்று காற்று அதிகமாக வீசினால் இந்த மின்கம்பமானது முறிந்து கீழே விழுந்தால் பெரிய அளவில் ஆபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஆபத்து விளைவிக்கும் முன்பே இந்த கம்பத்தை அகற்றி புதிய கம்பத்தை நட வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story