விளையாடிக் கொண்டிருந்த சிறுமி வாகனம் மோதி உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

சிறுமி சத்யா
மாதவரம் அடுத்த மணலி புதுநகரை கவுண்டர்பாளையத்தில் பூம்பூம் மாட்டுக்காரர் தொழில் செய்து வருபவர் செல்லப்பா. இவரது 8 வயது சிறுமி சத்யா வீட்டின் முன்புறமாக சக குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அங்கு டாட்டா ஏசி லோடு வாகனம் ஒன்று பழைய துணிகளை வாங்குபவர் வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்தார்.
பின்னர் வாங்கிய துணிகளை வண்டியில் ஏற்றி விட்டு வாகனத்தை திருப்புவதற்காக பின்னோக்கி ஓட்டிய போது பின்னால் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை பார்க்காமல் அவர் மீது மோதினார். இதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள். உடனடியாக குழந்தையை மீட்டு வாகனத்தை ஓட்டிவந்த நபரின் வாகனத்திலேயே வைத்து செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அறிந்த லோடு ஓட்டி வந்த ஓட்டுநர் உடனடியாக தலைமறைவாகிவிட்டார். இச்சம்பவம் குறித்து மணலிபுதுநகர் காவல் நிலையத்தில் வழக்கு செய்யப்பட்டு ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu