இட ஒதுக்கீடு கோரி முதல்வர் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஆணைய நீதிபதிக்கு கடிதம்
கடிதம் எழுதும் நிகழ்ச்சி பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பி.எஸ்.சபாபதி தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், வில்லிவாக்கம் கிழக்கு ஒன்றியம் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு விரைந்து நிறைவேற்றிடக்கோரி தமிழக முதல்வர் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஆணைய நீதிபதி பாரதிதாசன் ஆகியோர்களுக்கு கடிதம் எழுதும் நிகழ்ச்சி பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பி.எஸ்.சபாபதி தலைமையில் நடைபெற்றது.
வில்லிவாக்கம் கிழக்கு ஒன்றிய பாமக செயலளர் சகாதேவன், மாநில செயற்குழு பொதுகுழு தமிழ்உமாபதி, ஒன்றிய அவைத்தலைவர் குமார், ஒன்றிய பொருலாளர் பவானிபன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளருமான கோ.இரவிராஜ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு லட்சுமிபுரம் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் முதல் கட்டமாக சுமார் 200-க்கும் மேற்பட்ட இட ஒதுக்கீடு வழங்கிடக் கோரிய கடிதங்களை அனுப்பினார்.
இதில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தன், ஒன்றிய வுன்சிலர் ராஜேஷ்வரிமுனுசாமி மற்றும் கருணாகரன், சுரேஷ், அரவிந்குமார், சக்திவேல், பிரகாஷ், அன்பரசு, பார்த்திபன், சுதாகர், அரசு, வினோத்குமார், யுவராஜ், நிர்மல், பழனி, குமார், வசந்த் உள்ளிட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu