/* */

மாதவரம் அருகே மோரையில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா..!

மாதவரம் அருகே மோரை ஊராட்சியில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

மாதவரம் அருகே மோரையில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா..!
X

மாதவரம் அருகே மோரை ஊராட்சியில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான். ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி.  வெகு கோலாகலமாக நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழா.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி மோரை ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா நிர்வாக தலைவர் ஆதிகேசவலு, மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கோவில் பொறுப்பாளர்கள் ரஜினா அவினகிருஷ்ணன், கீதா, கண்ணன், லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமுறைபாராயணம், வேதபாராயணம், கோபூஜை, வேதா அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யா ஹவசம், கணபதி ஹோமம், தனபூஜை, மகாலட்சுமி ஹோமம், நவக்கிரகம் பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், கும்பஅலங்காரம், அஷ்டமருந்து, முதல் நான்கு கால யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கும்பகலசங்களை மேளதாளத்துடன் மாடவீதியாக சென்று அனைத்து விமானம் மற்றும் ஸ்ரீ மஹாகணபதி, ஸ்ரீ மகேஷ்வரி அம்பாள் சமேத ஸ்ரீ மஹேஷ்வரர், ஸ்ரீ தண்டாயுதபாணி, ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ துர்கை, ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், விநாயகர், பைரவர் வாராஹி, நாகர்கள் மற்றும் ஸ்ரீ மௌனகுரு சுவாமி தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்து தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதணைத்தொடர்ந்து உற்சவருக்கு வண்ணமலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பித்து மேளதாள வானவேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் விழா குழுவினர், கிராம மக்கள், பக்தர்கள் மற்றும் சத்சங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.




Updated On: 19 Jun 2022 4:45 AM GMT

Related News