சோழவரம் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழா..!

சோழவரம் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழா..!
X

கிருஷ்ண ஜெயந்தி விழா 

சோழவரம் அருகே காரனோடை கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு : பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சோழவரம் அருகே ஸ்ரீ திரொபதி அம்மன் சமேத ஸ்ரீ தர்மராஜா ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் ஜெயந்தி விழா.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் காரனோடை ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரொபதி அம்மன் சமேத ஸ்ரீ தர்மராஜா ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் ஜெயந்தி விழா ஆலய திருப்பணி குழு தலைவர் டி.எம்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் ராமசந்திரன், ஜெயசந்திரன், ராமசந்திரன், கோபால், தயாளன், ரவிகண்ணன் ஆகியோர் முன்னிலையில் உற்சவர் ஸ்ரீ கிருஷ்ணர் ராதைக்கு சிறப்பு பூஜையுடன் வண்ணமலர்கள் மற்றும் திருஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்த உணவான வென்னை, சீடை உள்ளி இனிப்புகளை படையலிட்டு ஸ்ரீ கிருஷ்ணர் மூலமந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதணைத்தொடர்ந்து குழந்தைகள் பக்தியுடன் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து ஆன்மீக நடனமாடி காண்போரை மகிழவைத்தனர்.அதேபோல் பஜனை நடனநிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் இவ்விழாவை முன்னிட்டு ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினர்.இதில் ஆலய பொறுப்பாளர்கள், சுற்றுவட்டார பக்தர்கள், கிராமபொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது