காரனோடை திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா கோவில் மஹா கும்பாபிஷேக விழா

காரனோடை திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா கோவில் மஹா  கும்பாபிஷேக விழா
X

கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

காரனோடையில் திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சோழவரம் அருகே பழமையான திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த காரனோடையில் பழமை வாய்ந்த அருள்மிகு திரவுபதி அம்மன் சமேத ஸ்ரீ தர்மராஜா திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.இதையடுத்து யாக குண்டத்தில் பூர்ணாஹுதி செய்யப்பட்டது.


இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ கோபுர கலசத்திற்கு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷமிட்டு அம்மனை வணங்கினர். இதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு பால்,தயிர், சந்தனம்,இளநீர்,ஜவ்வாது, தேன்,மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திரவுபதி அம்மனையும் தர்மராஜாவையும் தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு