பம்மதுகுளம் ஊராட்சி பெருமாள் நகரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

பம்மதுகுளம் ஊராட்சி பெருமாள்  நகரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
X

பெருமாள் நகர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. 

பம்மதுகுளம் ஊராட்சி பெருமாள் நகரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

சென்னை வடகிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் பம்மதுகுளம் ஊராட்சி பெருமாள் நகர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா பெருமாள் நகர் இளைஞரணி நிர்வாகி வடிவேல் தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோ.தயாளன் கலந்துகொண்டு பெருமாள் நகர் பொதுமக்கள் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தலை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி மற்றும் தரமான குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் பம்மதுகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கோதைதினேஷ், விவசாய அணி நிர்வாகி ரவி, கிளை செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் ஆனந்தகுமார், கவியரசன், தேவராஜ், வேங்கையன், பாபு, சங்கர், ரோஸ், கலைசெல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story