சோழவரம் அருகே நர்சிங் கல்லூரி முதலாம் ஆண்டு பயிற்சி துவக்க விழா

சோழவரம் அருகே நர்சிங் கல்லூரி முதலாம் ஆண்டு பயிற்சி துவக்க விழா
X

சோழவரம் அருகே நர்சிங் கல்லூரி முதலாம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்ற திருநாவுக்கரசரம் எம்.பி.

சோழவரம் அருகே நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிற்சி துவக்க விழாவில் எம்.பி திருவிழாக்கரசு பங்கேற்றார்.

மாதவரம் அருகே ஒரக்காடு கிராமத்தில் எம்.கே.எல்.நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு செவிலியர் பயிற்சி துவக்க விழாவில் எம்.பி. திருநாவுக்கரசர் பங்கேற்றார்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஒரக்காடு கிராமத்தில் அமைந்துள்ள எம்.கே.எல். நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு செவிலியர் பயிற்சி வகுப்பு துவக்க விழா கல்லூரியின் வளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் எல்.ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார்.துணை முதல்வர் காயத்ரி முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பனிமலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.


நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் இந்நாள் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினருமான திருநாவுக்கரசர்,மற்றும் பெர்னட் ஆண்டனி ராஜ், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.எம்.தாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் மத்தியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.இதில் கல்லூரியின் இயக்குனர் விஸ்வதீனா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business