விளாங்காடுப்பாக்கத்தில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

விளாங்காடுப்பாக்கத்தில்   தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்
X

மருத்துவ முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யும் மருத்துவர்கள்.

செங்குன்றம் அருகே விளாங்காடுப்பாக்கம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

செங்குன்றம் அருகே விளாங்காடுப்பாக்கம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம், செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் உள்ள சமுதாய நலகூடத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சார்பில் புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விளாங்காடுபாக்கம், தீர்த்தக்கிரியம்பட்டு, புள்ளிலைன், கிராண்ட்லைன்,வடகரை, அழிஞ்சிவாக்கம், சென்றம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

புழல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா பெர்னாண்டோ, விஜயா, புழல் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வட்டார மருத்துவ அலுவலர் மதுமதி அனைவரையும் வரவேற்றார். முகாமிற்கு மருத்துவர்கள் சாமுவேல், சங்கீதா, சரண்யா மற்றும் மருத்துவகுழுவினர்கள் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், கண், பல் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினர்.இதில் ஊராட்சி செயலாளர்கள் பொன்னையன், டில்லி, உல்லாசக் குமார், தேவகி, யுகேஸ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் விளாங்காடுபாக்கம் ஊராட்சி செயலர் மகேந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!