மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக்கொலை செய்த கணவர் தந்தையுடன் கைது

மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக்கொலை செய்த கணவர் தந்தையுடன் கைது
X
செங்குன்றம் அருகே மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக்கொலை செய்த கணவர் தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.

தன் மனைவியுடன் தனியாக குடும்பம் நடத்திய முன்னாள் காதலனை வெட்டி கொன்ற விவகாரத்தில் கணவன் அவருக்கு உறுதுணையாக இருந்த தந்தை ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் சுதாசந்தர் (வயது22). சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2 மாதத்துக்கு முன், செங்குன்றம் பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி இரவு சுதாசந்தர் ஆட்டோவில் ஒரு இளம்பெண்ணுடன் புழல் வினாயகபுரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆட்டோவை நிறுத்தி சுதாசந்தருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.

பின்னர் அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுதாசந்தரின் தலை, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சுதாசந்தர் உயிரிழந்தார்

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புழல் காவல்துறையினர் சுதாசந்தரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். இதில் முதல் கட்ட விசாரணையில், சுதாசந்தருடன் ஆட்டோவில் வந்த இளம்பெண் ஆவடி அடுத்த மோரை பகுதியை சேர்ந்த ராகிணி என்று தெரியவந்தது.

ராகிணியை கடந்த 2 வருடங்களுக்கு மேலாகவே சுதாசந்தர் காதலித்துள்ளதாகவும், இந்த விவகாரம் ராகிணியின் பெற்றோருக்கு தெரியவந்ததும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும். பின்னர், கடந்த ஒரு வருடத்துக்கு முன், ராகிணிக்கு பெற்றோர்கள் வேறு நபரை பார்த்து திருமணம் செய்து விட்டதாகவும், திருமணம் ஆகியும், ராகிணி காதலனை மறக்க முடியாமல் சுதாசந்தருடன்,தொடர்பில் இருந்து வந்துள்ளார். இவர்கள் யாருக்கும் தெரியாமல் ஆவடியில் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாகவும், இதற்குப் பின்னர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு புழல் அருகே லட்சுமிபுரம் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதனால் ராகிணியின் கணவன் வசந்த் (௩௮) ஆத்திரம் அடைந்தார்.

தனது மனையுடன் தனி குடித்தனம் நடத்திய காதலன் சுதாசந்தரை, தீர்த்து கட்ட வேண்டும் என்று ராகிணியின் கணவன் திட்டமிட்டார். இதையடுத்து, இந்த கொலையில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் கார்த்திக் (30), ராகிணியின் அண்ணன்கள் ஆவடி வெள்ளச்சேரி பகுதியை சேர்ந்த பரத் (எ) ராபின் (30), உதயா (26) ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ராகிணியின் கணவர் வசந்த் (28), அவரது தந்தை வாசுதேவன் (60) ஆகிய இருவரை போலீசார் தேடி வந்த நிலையில். புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்து பின்னர் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai in future education