உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு புழல் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள்
விளாங்காடுபாக்கம் முதல் நிலை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடுபாக்கம் முதல் நிலை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் ச.பாரதி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கலாவதி நந்தகுமார், பற்றாளர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்காக அறிவித்துள்ள மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகைக்காக அவரைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலக தண்ணீர் தினத்தில் தண்ணீரை சேமிப்பதோடு, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நீரை சேமிக்க வேண்டுமென்றும், நீரை வீணாக்கக் கூடாது என்றும் ஊராட்சி மன்றத் தலைவர் கோரிக்கை வைத்தார்.
இதில் ஊராட்சியின் வளர்ச்சித் திட்டப் பணிகள் உள்ளிட்டவைகள் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் என்.ஆனந்தி நாகராஜன், ர.தர்மிரவி, ஏ.எல்,மாரி, எஸ்.அருணாதேவி சீனு, என்.மாரியம்மாள் நரசிம்மன், க.சத்தியசீலன், மு.நிலவழகி இனியன், எஸ்.ரதி சீனிவாசன், செயலர் கே.வி. மகேந்திரன் உள்ளிட்ட மகளிர் குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல்
வடகரை ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்
புழல் ஊராட்சி ஒன்றியம் வடகரை ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் நா.ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் அனிதாகுமாரி செந்தில் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் ஊராட்சியில் செய்யப்பட்ட பணிகள் குறித்தும், தண்ணீரை சேமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதில் வார்டு உறுப்பினர்கள் சி.நாராயணசாமி, வி.சுகந்தி வினோத், ஆர்.காஞ்சனாமாலா நரேஷ், ஐ.சிலம்பரசி இளம்பாரதி, பி.சுரேஷ், ஜி.சம்பத், எஸ்.சங்கரி ஸ்ரீதர், பி.பத்மினி பாரதி, ஊராட்சி செயலர் உல்லாசக்குமார் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகள், மகளிர் குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புள்ளிலைன் ஊராட்சியில் கிராம சபா கூட்டம்
புள்ளிலைன் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை வரவேற்று பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தண்ணீர் தின நாளில் தண்ணீரை சேமிப்பதோடு, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நீரை சேமிக்க வேண்டுமென்றும், குழந்தைகளுக்கு சிறுதானிய உணவுகளில் உணவுகளை செய்து கொடுத்து ஆரோக்கியமாக வளர உதவ வேண்டுமென்றும் ஊராட்சி மன்றத் தலைவர் கோரிக்கை வைத்தார்.
இக்கூட்டத்தில் புழல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி துணை அலுவலர் வேதநாயகி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.மாதவன், வார்டு உறுப்பினர்கள் சாக்ரடீஸ், பாரதி பாபு, ஊராட்சி செயலர் பொன்னையன், வேளாண்மை உதவி அலுவலர் ஏழுமலை உள்ளிட்ட மகளிர் குழுவினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu